Avalathu Paathai / அவளது பாதை



  • ₹165

  • SKU: SA0001
  • ISBN: 9788126041312
  • Author: Appoori Sayadevi
  • Language: Tamil
  • Pages: 340
  • Availability: In Stock

அவளது பாதை : இந்த நூலில் 28 சிறுகதைகள் அமைந்துள்ளன. பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் (பெண்ணியம்) ஆண் பெண் கருத்து வேறுபாடுகள், அனுபவபூர்வமாக காலபூர்வமாக, எளிய சரளமான நடையில் தன் வாழ்வில் நடந்ததைப் போல உணர்வுடன் யாரையும் புண்படுத்தாத வகையில் அழகிய முறையில் வாசகர்களை கவரும் வகையில் எழுதப்பட்டு பலராலும் பாராட்டப்பட்ட கதைகள் அடங்கிய நூல்.

 

அப்பூரி சாயா தேவி : தெலுங்கு இலக்கிய உலகில் வாசகர்களின் உள்ளம் கவர்ந்த பெண் எழுத்தாளர் 1933-ல் அக்டோபர் 13ல் ராஜமண்றி ஊரில் பிறந்தவர். கணவர் அப்பூரி வரதராஜேஸ்வரராவ். தனது கல்லூரி நாட்களில் எழுத ஆரம்பித்தார். நிஜாம் இதழ் வித்யார்த்தியில் முதல் கதை `அனுபந்தம்' வெளிவந்தது. 1954ல் 'கவித' பத்திரிகையில் ஆசிரியராகப் பணி செய்தார். புதுதில்லி நேரு பல்கலைக்கழகத்தில் நூலகராகப் பணி செய்தார். பணி காரணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்று வந்தார். இவரது படைப்புக்கள் சில ஆங்கிலம், இந்தி, மராட்டி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வந்துள்ளன. தந்தையார் தனக்கு எழுதிய கடிதங்களை ஆதாரமாக வைத்து மிருத்யுஞ்சய என்ற நூல் எழுதினார். 1996ல் இவரது படைப்புக்கு 'ஆந்திர விஸ்வவித்யாலயம்' சிறந்த படைப்பாளி விருது அளித்து சிறப்பித்தது. நாராயண ரெட்டி நினைவுப்பரிசு, 1996 : கலாசாகர், சாகித்திய விருது 2000 இப்படிப் பல விருதுகள் பெற்றவர்.

 

கொ.மா. கோதண்டம் : இவரது படைப்புக்கள் சில ஆங்கிலம், ஜெர்மன், உருசிய, சிங்கள, வங்காள, இந்தி, தெலுங்கு மொழிகளில் வந்துள்ளன. தெலுங்கு, மலையாளம் மொழிகளிலிருந்து சிறுகதை, கவிதைகளை மொழி பெயர்ந்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக மலையாள சிறுவர் கதை நூல், கிளிகளின் கிராமம் முன்பே வந்துள்ளன. மலைபடுவாழ்க்கை-வனயியல், தாவர இயல், பறவையியல் விலங்கியல் இவைகளை வைத்து நூறு நூல்கள் வரை எழுதியுள்ளார். மலேசியா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வியமைப்பு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. இதுவரை 70 பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளர்.

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up